மட்டக்களப்பு, ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில், சமையல் எரிவாயு சிலிண்டர் லொறியில் இருந்து விழுந்ததால் பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஓட்டமாவடி பஸார் வீதியியைச் சேர்ந்த இஸ்மாயில் ஹஸீர் ரிஸ்னா என்ற (வயது 13) என்ற மாணவியே காயத்திற்குள்ளாகியுள்ளார்.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் தரம் 07ல் கல்வி கற்கும் மாணவி மீதே சிலிண்டர் விழுந்துள்ளது.
குறித்த மாணவி இன்று மாலை வகுப்பு முடிந்து வீடு செல்லும் போது, லொறியில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்கிக் கொண்டு இருந்த வேளை, தவறுதலாக மாணவி மீது விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மாணவி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.