ஒன்பதுல குரு படத்திற்குப் பின்பு கோடம்பாக்கத்தை காலி செய்துவிட்டு பெங்களூர், மும்பை என்று இடம்பெயர்ந்து விட்டார் லட்சுமிராய்.
தற்போது சில கன்னட படங்களில் நடித்து வரும் லட்சுமிராய், இந்தி படங்களை கைப்பற்றவும் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறாராம்.
ஏற்கனவே சில பாலிவுட் நடிகர்களின் நட்பு இருப்பதால், அவர்களின் சிபாரிசின் பேரிலும் புதிய வாய்ப்புகளுக்கு போராடிக் கொண்டிருக்கிறாராம்.
இந்நிலையில் தெலுங்கில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக அஞ்சலி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் பலுபு என்ற படத்தில் குத்து பாடல் ஒன்று வருகிறதாம்.
இந்த பாடலுக்கான தகுந்த நடிகையை படக்குழு தேடி வந்திருக்கிறது. இதனையறிந்த லட்சுமிராய் தானாகவே முன் வந்து குத்து பாடலுக்கு நடனமாட சம்மதித்திருக்கிறார்.
மேலும் இதற்காக கொடுத்த பணத்தை எண்ணிப் பார்க்காமல் அப்படியே வாங்கியிருக்கிறார்.
ஆந்திராவில் முன்னணி நடிகரான ரவிதேஜா போன்ற நடிகர்களுடன் நடித்தால் அடுத்தடுத்து படங்களில் வாய்ப்பு கிடைக்கலாம் என்பதை எண்ணியே குத்தாட்டம் போட சம்மதித்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.