புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



இந்நபர் வானக பாகங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இன்று (20) காலை கைது செய்யப்பட்டவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட தேனீர் அவரது உடலில் சிந்தியமையின் காரணமாக அதனை துடைத்துக் கொள்வதற்கு பொலிஸாரால் துணி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்த துணியைக் கொண்டு சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த நபர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசித்து வருபவர் எனவும் இதற்கு முன்னதாகவும் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
Top