புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பலவித குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து இலங்கையர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் கொலைக்
குற்றவாளிகளும் உள்ளடங்குவதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

டுபாய், அபுதாபி, கட்டார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் வாழும் 10 இலங்கையர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களை குறித்த தண்டனையிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை இலங்கையினால் முன்னெடுக்க முடியாது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு விரிவாக்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டின் நீதித்துறைக்கு எதிராகவும் பிறிதொரு நாட்டினால் நடவடிக்கை எடுக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்த போதும், மரண தண்டனை விதிக்கப் பட்டவர்களை அதிலிருந்து மீட்கும் பொருட்டு வெளிவிவகார அமைச்சிடமோ அல்லது வேறு ஏதேனும் அமைப்புக்களின் உதவியை நாடுவதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
Top