அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வந்து இறங்கிய விமானத்தில் சக்கரம் வேலை செய்யாததால், விமானம் சருக்கிக் கொண்டு இறங்கியது.
அமெரிக்க நியூயார்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. அப்போது அந்த விமானத்தின் முன் சக்கரப் பகுதியில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமான முன் சக்கரம் கீழிறங்காமல், விமானத்தின் முன்பகுதி தரையை கிழித்துக் கொண்டு சருக்கி சென்றது. இதனால் விமானத்திற்குள்ளே இருந்தாவர்கள் என்ன ஆவர்களோ என்று பரபரப்பு நிலவியது.
இருந்தும் அந்த விமானம் சருக்கி சென்று நின்றுவிட்டதால், அதிலிருந்த 34 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.