ஆந்திர மாநிலத்தில் ஒரு மாணவியை ஆபாசமாக சித்தரித்து, அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பாபட்லாவைச் சேர்ந்த ஒரு மாணவியின் பெயரில் போலியான ஒரு பேஸ்புக் பக்கத்தை தொடங்கி, அதில் அப்பெண்ணை ஆபாசமாக சித்தரித்த புகைப்படங்கள் மற்றும்
பொய்யான தகவல்களுடன் தொலைபேசி எண்ணையும் இணையத்தில் வெளியிட்டார் ஒரு பேஸ்புக்கில் தனது ஆபாச படங்கள் வெளியான தகவல் அறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சிராலா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்ததா என்னும் கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.