திருகோணமலையில் வாய் பேச முடியாத சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முந்தினம் லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுமியை முச்சக்கர வண்டிச் சாரதியான 33 வயதுடைய நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குறித்த சிறுமி தனது ஆசிரியரிடம் இச்சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த நபரின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை யாழ்ப்பாணத்தில் தங்கி வேலை செய்வதாகவும் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.