புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மலையாள காமெடி நடிகர் பக்ரு. தமிழில் டிஷ்யூம் உள்பட பல படங்களில் நடித்தார். 70 செ.மீட்டர் உயரமே உள்ள பக்ரு. அதிசய தீவு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். 2008ம் ஆண்டு உயரம் குறைவான ஹீரோ என்று கின்னஸ் சாதனை
புத்தகத்தில் இடம் பிடித்தார். இதுவரை நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள பக்ரு. இப்போது அடுத்த சாதனைக்கு தயாராகி உள்ளார்.

உலகின் உயரம் குறைந்த இயக்குனர் என்கிற சாதனையை படைக்கப்போகிறார். அவர் "குட்டியும் கோலும்" என்ற படத்தை இயக்க இருக்கிறார். இது குழந்தைகளுக்கான காமெடிப் படம். குட்டியாக அவரே நடிக்கிறார். கோல் என்பது மந்திரகோலை குறிக்கும். அதைக் கொண்டு அவர் சிறுவர்களின் பிரச்னைகளை தீர்ப்பது மாதிரியான கதை. "இது பக்கா கமர்ஷியல் காமெடி படம். நவம்பர் மாதம் துவங்கி ஒரே ஷெட்யூலில் படம் முடிகிறது. டிசம்பரில் வெளியிடுவோம். கேமராவில் கோணம் பார்ப்பதற்காக தனி நாற்காலி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
 
Top