ஹபரன, ஹதருஸ்கொட்டுவ பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த யானை கடந்த சில நாட்களாக பயிர் நிலங்களுக்கு சேதம் விளைவித்துள்ளதோடு, நேற்று அதிகாலை துப்பபாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உள்ளது.
தலையில் இரண்டு முறை சுடப்பட்டு இறந்துள்ள இந்த யானை, எட்டரை அடி உயரம் கொண்ட, 30 வயதுடைய காட்டு யானை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.