கொழும்பு கொட்டாவ தர்மபால வித்தியாலயத்துக்குள் அத்து மீறிப் புகுந்த நபரொருவர் அந்தப் பாடசாலை ஆசிரியை அணிந்திருந்த 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி பகல் 11 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை ஆரம்ப வகுப்பில் தனது குழந்தையை சேர்ப்பதற்கான தகவல்களை பெற வேண்டுமெனக் கூறி பாடசாலைக்குள் நுழைந்த இந்த நபர் வகுப்புக்கு வெளியெ நின்று கொண்டிருந்த ஆசிரியை அணிந்திருந்த தஙகச் சங்கிலியை அறுத்துக் கொண்டு பாடசாலை வாசல் வழியே தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.