புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் பத்திரிகைகள் மீதும், நிருபர்கள் மீதும் கோபத்தில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.


தேவையில்லாமல் ஏதேதோ எழுதுகிறார்கள். எந்த நடிகை பற்றியாவது உண்மையோ பொய்யோ எதையாவது எழுதி மனதை நோகடித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான். இவர்களின் ஆசையோ என்னவோ.

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டார். இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என்று எழுதுகிறார்கள். நான் எந்த அப்படி பேட்டி கொடுத்தேனா..? யூகம் அடிப்படையில் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.

3 படத்துக்கு பின் தமிழில் நடிக்கவில்லை என்பது உண்மைதான். காரணம் தெலுங்கில் பலுபு, ஏவடு, ராமையா வஸ்தாவையா, ரேஸ்குராம் என நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்திப் படங்களிலும் நடித்து வருகிறேன். அதனால்தான் தமிழ் படங்களுக்கு கவனம் செலுத்த முடியவில்லை என்கிறார் கோபத்துடன்.
 
Top