இரத்தினபுரி, இறக்குவானை கொரமுல பிரதேசத்தில் பெண்ணொருவர் மண்ணெண்ணை ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயினை அணைக்க முயன்ற குறித்த பெண்ணின் கணவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிகாயங்களுடன் கணவன், மனைவி இருவரும் கஹவத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பெண் நேற்றிரவு உயிரிழந்தார்.
குடும்ப முறுகலே உயிரிழப்பிற்கான காரணம் என பொலிஸார் கூறுகின்றனர்.
இதனிடையே, பொகவந்தலாவ மோரா தோட்டத்தில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
25 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞரின் சடலம் பரிசோதனைக்காக பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
பின்னர் குறித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மேலதிக பிரேத பரிசோதனைகளுக்கான நாவலப்பிட்டி பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.