புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனி-ட்ராபிக்கல் ஐலாண்ட்ஸ் என்ற ஆடம்பர விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் 15 வயது சிறுவன் மிதந்ததைப் பார்த்த சிலர் உடனே பொலிஸ் மற்றும் மருத்துவ உதவியை நாடினர்.

மருத்துவர்கள் முயற்சி செய்தும் அவனை பிழைக்க வைக்க இயலவில்லை. சிறுவனின் மரணத்தில் திட்டமிட்ட சதியோ, கொலை முயற்சியோ நடந்திருப்பதாகத் தெரியவில்லை என்று Bild நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு ஜேர்மனியின் ஹெசென் மாவட்டத்தைச் சேர்ந்த இச்சிறுவனுக்கு சில உடல் நலப் பிரச்னைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் அவற்றை விபரமாக Bild வெளியிடவில்லை.

இச்சிறுவன் பிற்பகல் ஒரு மணியளவில் நீச்சல் குளத்தின் நடுவில் சுமார் 1.35 மீற்றர் ஆழமுள்ள பகுதியில் மிதந்து கொண்டிருந்தான். உயிரற்ற உடல் போலத் தோன்றியதால் அருகில் நீந்தியவர்கள் மருத்துவ உதவி பெற்றனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.



 
Top