அம்பாந்தோட்டை - கட்டுவன பிரதேச சபை முன்பாகவுள்ள மரத்தின் மீதேறி பெண் ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பணியை நிரந்தரமாக்குமாறு கோரிக்கை விடுத்து பிரதேச சபையின் பெண் சிற்றூழியர் ஒருவரே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு கட்டுவன பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.