புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தங்கள் குடும்ப கவுரவத்தை அழித்து விட்டாளே என்ற வெறியில் தங்கையை கொன்றதாக, கைது செய்யப்பட்ட அண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னையை அடுத்த
பொன்னேரியைச் சேர்ந்தவர் சவுமியா. இவரும் நாகர்கோவிலைச் சேர்ந்த சிவா என்பவரும் வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நேற்று சவுமியா, அவரது கணவர் சிவா மற்றும் மாமனார் ஜெயராமன் ஆகியோரை அவரது வீட்டில் வைத்து கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக்கொன்றது. இதில் சவுமியா, ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொலையில் ஈடுபட்டதாக, சவுமியாவின் சகோதரர் சபரிநாதன், அவரது நண்பர்கள் சேகர் மற்றும் செல்லப்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்கையின் செயலால் தங்கள் குடும்பத்தின் கவுரவம் குலைந்து விட்டதால் கொலை செய்ததாக சபரிநாதன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தியாவில் காதல் திருமணம் செய்த பெண்ணை மாமனாருடன் வெட்டி கொலை
 
Top