ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை பார்ப்பவர்களெல்லால் இது நம்ம சிம்புதானா..? என கேட்கும் அளவுக்கு சாந்தமாக மாறிவிட்டார்.
அலட்டல் இல்லை. தேவையில்லாமல் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதில்லை. யாரையும் எடுத்தெரிந்து பேசுவது, கோபப்படுவது என எந்த விதமான பந்தாவும் இல்லாமல் தான் உண்டு நடிப்பு உண்டு என இருக்கிறார். அது மட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம், யோகா வகுப்புகளுக்கும் சென்று வருகிறாராம்.
இப்படி ஒரு மாற்றத்தை சிம்புவிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த அதிரடி மாற்றத்துக்கு ஹன்சிகாதான் காரணம் என்கின்றனர். அவர் அன்புடன் சொல்லும் அறிவுரை மனசுக்கு திருப்தியாக இருப்பதால், இனிமேலும் கூட ஹன்சிகாவின் ஆலோசணைப்படியே நடந்து கொள்வது என தீர்மானிமானித்திருக்கிறாராம் சிம்பு.