புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சமீபகாலமாக பழைய படங்களின் தலைப்புகளை இப்போதைய படங்களுக்கு வைப்பதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா படத்துக்கு எம்.ஜி.ஆர் என்றே சுருக்கமான
டைட்டீலை வைத்தார் சுந்தர்.சி. எல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான். அதன்காரணமாகவே அந்த படத்தில் எம்.ஜி.ஆர் பற்றிய ஏதோ விசயங்கள் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், நண்பன், பாகன் படங்களையடுத்து ஸ்ரீகாந்த் நடிக்கும் படத்திற்கு நம்பியார் என்று பெயர் வைத்துள்ளனர். மாஜி வில்லன் நம்பியாரின் பெயர் என்பதால், படத்திற்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்று இப்படியொரு பெயரை வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகன் என்றபோதும், காமெடி வில்லனாக நடித்துள்ள சந்தானத்துக்குத்தான் இந்த நம்பியார் பெயராம். டைட்டீல் கேரக்டரில் தான் நடிப்பதால் அப்படத்தில் நடிக்க டபுள் ஓ.கே சொல்லிவிட்டாராம் அவர்.

மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக சுனைனா நடிக்கிறாராம். கதைப்படி அவரை காதலிப்பது ஸ்ரீகாந்த்தான் என்றாலும், சந்தானமும் போட்டி போடுகிறாராம். ஆக, நீர்ப்பறவை படத்தில் திறமை காட்டி எடுபடாமல் போனதால், இந்த படத்தில் காமெடியன் சந்தானத்துடனும் டூயட்டெல்லாம் பாடுகிறாராம் சுனைனா.

 
Top